மத்திய பிரதேசம் : வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த நபர்..! தட்டிக்கேட்டதால் துப்பாக்கியால் சுட்ட கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோட் கிராமத்தில் பிந்து ஷர்மா என்ற நபர், அப்பகுதியில் உள்ள விகாஷ் சிங் என்பவருடைய வீட்டின் முன்பு பட்டப்பகலில் அடிக்கடி சிறுநீர் கழித்துள்ளார். 

பிந்து சர்மாவின் இந்த கீழ்த்தரமான செயலால் ஆத்திரமடைந்த விகாஷ் சிங்கின் குடும்பத்தினர், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். 

இதனால், கோபத்தில் கொந்தளித்த பிந்து ஷர்மா, மதுபோதையில், தனது நண்பருடன் விகாஷ் சிங் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 12 வயது சிறுவன் மட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், குற்றவளியான பிந்து ஷர்மாவையும், அவருடைய நண்பரையும் கைது செய்து சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madhya pradesh children died for gun shoot


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->