நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - மாநில அரசுக்கு மோடி வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான முதலாவது நீர்வளத்துறை மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- "நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

நீர்நிலைகளை சிறப்பாக பராமரித்தால் வேளாண்துறை வேகமாக வளர்ச்சி அடையும். நீர் ஆதாரங்களை வலுப்படுத்தி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். 

மத்திய அரசுடன், மாநில அரசுகள் தொடர்ந்து பணியாற்றி நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும். நீர் சேமிப்புத் துறையில் ஜியோசென்சிங் மற்றும்  ஜியோமேப்பிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். 

தொழில் மற்றும் விவசாயம் என்பது அதிகளவு தண்ணீர் தேவைப்படும் இரண்டு துறைகள் ஆகும். இதில், ஜல் ஜீவன் மிஷன் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவதற்கான முக்கிய வளர்ச்சி அளவுகோலாக மாறியுள்ளது. 

நமது அரசியலமைப்பு அமைப்பு சட்டத்தில், தண்ணீர் பொருள் மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. நீர் பாதுகாப்பிற்கான மாநிலங்களின் முயற்சிகள் நாட்டின் கூட்டு இலக்குகளை அடைவதற்கு நீண்ட தூரம் செல்லும்" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madhya pradesh First National Water Resources Department meeting modi speach


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->