ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தந்தையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச் சென்ற சிறுவன்.!
near madhya pradesh six years old boy pushed father in pushcart for treatment vedio viral
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிங்ராவ்லி மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் தனது தந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி செல்கின்ற வீடியோ ஒன்று வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த சிறுவனின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்காக ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸை வருவதற்கு சுமார் இருபது நிமிடத்திற்கு மேல் ஆனது.
இதனால் அந்த சிறுவன் காலதாமதம் செய்ய வேண்டாம் என்பதற்காக ஒரு தள்ளு வண்டியில் தந்தையை உட்கார வைத்து தாயின் உதவியுடன் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வண்டியைத் தள்ளி சென்றுள்ளான்.
சரியான ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையை வண்டியில் வைத்து தள்ளி சென்ற சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
English Summary
near madhya pradesh six years old boy pushed father in pushcart for treatment vedio viral