மகாராஷ்டிரா : திடீரென தீப்பிடித்து எறிந்த மின்சார ஸ்கூட்டர்.!
near maharastra electric scooter fire accident
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விரார் பகுதியில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை வாகனம் நிறுத்தும் இடத்தில் அந்த வாகனத்தின் உரிமையாளர், நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர், அந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகி போனது.
அந்த நேரத்தில் யாரும் அதன் அருகே இல்லை என்பதனால், யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அபகுதியில் உள்ள மக்கள் ஓடி வந்து தீயை அணைப்பதற்கு முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் அந்த ஸ்கூட்டர் எரிந்தது. இதைப்பார்த்த அந்த வாகனத்தின் உரிமையாளர் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளார்.
இதேபோன்று கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி மகாராஷ்டிராவில் வசாய் பகுதியில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றின் பேட்டரி, இரவில் அதிக நேரம் சார்ஜிங் செய்ததால் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில், சபீர் அன்சாரி என்ற ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 13-ந்தேதி செகந்திராபாத் நகரில் மின்சார ஸ்கூட்டர் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு எட்டு பேர் உயிரிழந்த நிலையில். 11 பேர் காயமடைந்தனர்.
மேலும், கடந்த மார்ச் மாதம், மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மின்சார ஸ்கூட்டரின் பாதுகாப்பு விசயங்கள் குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.
English Summary
near maharastra electric scooter fire accident