மகாராஷ்டிரா : பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை.! தூக்குபோட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நாக்பூர் வாதோடா வைஷ்ணவ் தேவி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மனோஜ் அசோக் பேலே. இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். 

இதையடுத்து நீதிமன்றத்தில் மேற்கொண்ட பரஸ்பர ஒப்பந்தத்தின்படி அவர் தனது மகன் பிரின்ஷ் மற்றும் மகள் தனிஷ்கா இருவரையும் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். 

அந்த உத்தரவின் படி, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தைகளை சந்திப்பதற்கு வந்த அவர், குழந்தைகள் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். 

அங்கு அவர்களுடன் காற்றாடி பறக்க விட்டு மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்தார். அதன் பின்னர் இருவருக்கும் விஷம் கலந்த உணவை வழங்கியுள்ளார். இதைசாப்பிட்ட குழந்தைகள் இருவரும் மயங்கி கீழே விழுந்தனர். இதை தொடர்ந்து, மனோஜ் அசோக் பேலே வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதற்கிடையே மனோஜின் மனைவி குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்வதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அவர்களைத் தொடர்புக்கு கொள்ள முடியவில்லை. இதனால், மனோஜின் வீட்டிற்கு அவரின் மனைவி குடும்பத்தினர் சென்றனர். 

அங்கு சென்ற போது தான் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, அவரும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது. அதன் பின்னர், அவர்கள் குழந்தைகளை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra father sucide after poisoning children


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->