30 அடி பள்ளத்தில் விழுந்த கார் : எம்.எல்.ஏ உள்பட நான்குபேர் காயம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்தாரா மாவட்டம் மன் தொகுதி எம்.எல்.ஏ. ஜெய்குமார் கோரே. இவர், நேற்று அதிகாலை புனேவில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளார்.

அந்த காரில் அவருடன் இரண்டு மெய்க்காவலர்கள் இருந்தனர். இவர்கள், அதிகாலை 3.30 மணியளவில் சத்தாரா மாவட்டம், பான்கங்கா ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

அதனால் நிலை தடுமாறிய கார் பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் எம்.எல்.ஏ. உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கார் பள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் படி, போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, எம்.எல்.ஏ. உள்பட நான்கு பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில், எம்.எல்.ஏ. மேல் சிகிச்சைக்காக புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அதன் படி, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra MLA car accident four peoples injury


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->