மகாராஷ்டிரா : நடைபாலம் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு - நான்கு பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள பலார்ஷா ரெயில்வே சந்திப்பில் நேற்று இரண்டு நடைமேடைகளை இணைக்க கூடிய நடைமேம்பாலம் ஒன்று  திடீரென தண்டவாளத்தின் மீது இடிந்து விழுந்துள்ளது. 

இந்த விபத்தில், நடைமேம்பாலத்தில் நடந்து சென்றவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் ஒரு பெண் உயிரிழந்தார். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் உடனடியாக நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இதைத் தொடர்ந்து, இந்திய ரெயில்வே படுகாயமடைந்த நபர்களுக்கு ரூ.1 லட்சமும், குறைந்த காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க அறிவித்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து, மத்திய ரெயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. அப்போது, நடைமேம்பாலம் இடிந்து விழவில்லை, அதில் இருந்த ஸ்லாப்பின் ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்துள்ளது என்று ரெயில்வே நிர்வாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharstra walking bridge broke woman died four peoples injury


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->