நொய்டா || தெருநாயால் ஏழு மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!
near noida street dog attack in seven month baby
உத்தரபிரதேச மாநிலத்திற்கும் டெல்லிக்கும் இடையே அமைந்துள்ள நகரம் நொய்டா. இங்கு செக்டார் 100 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று கட்டிடவேலை நடைபெற்றது.
அங்கு கட்டிட தொழிலாளிகளாக ஒரு தம்பதி தங்களது ஏழு மாத கைக்குழந்தையுடன் வேலைக்கு வந்துள்ளனர். இவர்கள் அந்த ஏழு மாத குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு வேலை செய்துவந்தனர்.
அப்போது, அந்த குடியிருப்பு பகுதிக்குள் திடீரென தெருநாய் ஒன்று வந்து, தனியாக இருந்த கைக்குழந்தையை கடித்து குதறியுள்ளது. இதனால், பச்சிளம் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பத்தி ஓடி வந்த பெற்றோர், விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது, குழந்தையை தெருநாய் கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின்னர், தெருநாயிடமிருந்து குழந்தையை மீட்டு குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிக படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழு மாத குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near noida street dog attack in seven month baby