ராஜஸ்தானில் தடம் புரண்ட ரெயில்.! பயணிகளுக்கு உதவி எங்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் ரெயில்வே மூலம் விபத்து நிவாரண ரெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வடமேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்ததாவது, "உயர் அதிகாரிகள் விரைவில் சம்பவ இடத்திற்கு வருவார்கள். இதேபோன்று வடமேற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் ஜெய்ப்பூரில் உள்ள தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அறையில் அதன் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

எக்ஸ்பிரஸ் ரெயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதால் மீதமுள்ள பதினொரு பெட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வழியிலேயே சிக்கித் தவிக்கும் பயணிகள் தங்கள் இடங்களுக்குச் செல்லும் வகையில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்ததாவது, "மார்வார் சந்திப்பிலிருந்து புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் ரெயிலுக்குள் அதிர்வு சத்தம் கேட்டது. அதன் பின்னர் இரண்டு நிமிடதிற்கு பிறகு ரெயில் நின்றது. அதன் பின்னர் கீழே இறங்கி பார்த்த போது, எட்டு பெட்டிகள் தடம் புரண்டிருந்தது. அதன் பின்னர் அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பயணிகள் மற்றும் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி, ஜோத்பூருக்கு: 02912654979, 02912654993, 02912624125, 02912431646 பாலி மார்வாருக்கு: 02932250324 அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near rajasthan railway department allounce helpline number for express train derail


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->