உ.பியில் பரபரப்பு - திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுமி.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கன்னாஜ் அருகே சிப்ரமாவ் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த பதினாறு வயது சிறுமி ஒருவரை பள்ளிக்குச் செல்லும் வழியில் சக்லைன் என்ற நபர் தகாத சைகைகளை காண்பித்து தொல்லை அளித்து வந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து சிறுமி தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அந்த நபரின் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளனர். 

ஆனால், அந்த வாலிபரின் உறவினர்கள் சிறுமியை அந்த வாலிபருக்குத் திருமணம் செய்து வைக்குமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் சிறுமியை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். 

மேலும், சிறுமியின் குடும்பத்தினர் சம்பவம் குறித்து உள்ளூர் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். இருப்பினும், அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமியின் குடும்பத்தினர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

அதன் பின்னர் கன்னாஜ் காவல் கண்காணிப்பாளர் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh girl write letter to CM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->