நீட் நுழைவுத் தேர்வு; OMR அடிப்படையில் ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும்; NTA அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மாணவர்கள் மருத்துவத்துறை பட்டப்படிப்பில் சேர்வதற்கு மிக முக்கியமான தேர்வாக நீட்  (NEET) கருதப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வு "நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி" (National Testing Agency) எனும் அமைப்பால் நடத்தப்படுகிறது.

குறிப்பாக, எம்.பி.பி.எஸ்., (MBBS- Bachelor of Medicine and Bachelor of Surgery),,பி.டி.எஸ்., (BDS Bachelor of Dental Surgery),பி.ஏ.எம்.எஸ்.,(Bachelor of Ayurvedic Medicine and Surgery) பி.எஸ்.எம்.எஸ்., (Bachelor of Siddha Medicine and Surgery),பி.யு.எம்.எஸ்., (Bachelor of Unani Medicine and Surgery) பி.ஹெச்.எம்.எஸ்., (Bachelor of Homeopathic Medicine and Surgery)போன்ற பட்டப்படிப்புகளில் சேர இந்த நீட் தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகும்.

அத்துடன்,  2025-ஆம் ஆண்டு ஆயுதப்படை மருத்துவ சேவை மருத்துவமனைகளில் நடத்தப்படும் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகளில் சேர விரும்பும் MNS (ராணுவ நர்சிங் சேவை) ஆர்வலர்களும் NEET (UG)க்கு தகுதி பெற வேண்டும். 

நான்கு ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படிப்பிற்கான தேர்வுக்கான குறுகிய பட்டியலுக்கு NEET (UG) மதிப்பெண் பயன்படுத்தப்படும்.

நீட் தேர்வு எழுத தேவையான தகுதிகள்;- 

1.பிளஸ்டூ படிப்பில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/பயோடெக்னாலஜி, பாடங்கள் படித்திருக்க வேண்டியது அவசியம்

2. இந்தப்பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

3. எஸ்.சி.,எஸ்.டி.,மற்றும் ஓபிசி.,பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மதிப்பெண்களில்10 சதவீதம் தளர்வு உண்டு.

4. நீட்நுழைவுதேர்வு எழுதுபவர்கள் கண்டிப்பாக 17 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். ஆனால், தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு குறிப்பிடவில்லை.

எந்தவயதிலும் இந்த தேர்வு எழுதலாம். தேசிய அளவில் நடத்தப்படும் நீட் என்னும் நுழைவுதேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. குறிப்பாக, மே மாதம் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

ஆங்கிலம் (English), இந்தி (Hindi), அசாமி (Assamese), பெங்காலி (Bengali), குஜராத்தி (Gujarati), கன்னடம் (Kannada), மலையாளம் (Malayalam),மராத்தி (Marathi), ஒடியா (Odia),பஞ்சாபி ( Punjabi), தமிழ் (Tamil), தெலுங்கு (Telugu) மற்றும் உருது (Urdu) ஆகிய மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படும்.

இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) முன்னர் தெரிவித்தபடி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அல்லது NEET (UG)-2025, பேனா மற்றும் காகித முறையில் (OMR அடிப்படையில்) ஒரே நாளில், ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET entrance exam NTA announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->