எவரெஸ்ட் சிகரத்தில் எற கட்டணம் உயர்வு - நேபாள அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகின் மிக உயரமான மலை என்று அழைக்கப்படுவது எவரெஸ்ட். இந்த மலை உச்சிக்கு சென்று பலர் சாதனை படைத்துள்ளனர். இந்த மலையில் ஏறுவதற்காக நேபாள அரசு ராயல்டி கட்டணம் வசூலித்து வருகிறது. ஆனால், இந்த ராயல்டி கட்டணம் கடந்த 2015ம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே உள்ளிட்ட மாதங்களில் உலகம் முழுவதும் ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வழியாக எவரெஸ்ட் மலையில் ஏறுகின்றனர். அதன் படி இந்த சீசனில் ஒரு நபருக்கு ரூ.9.51 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டது. 

ஆனால், தற்போது 36 சதவீத கட்டண உயர்வுடன் ஒரு நபருக்கு ரூ.12.96 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற ரூ.6.48 லட்சமும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சிகரத்தில் ஏற ரூ.3.02 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண உயர்வுக்கு நேபாள நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த புதிய கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டின் சுற்றுலா வாரியத்தின் இயக்குனர் ஆரத்தி நியூபேன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nepal government everest mount fees increase


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->