10 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு RBI அறிவித்த புதிய அறிவிப்பு என்ன தெரியுமா?
new announcement by RBI made children above age 10
ரிசர்வ் வங்கி, சிறார்களுக்கான வைப்பு கணக்குகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது.

இதில் ரிசர்வ் வங்கி, 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், சேமிப்பு (savings) மற்றும் கால(term) வைப்பு கணக்குகளைத் சுயமாக திறந்து நிர்வகிக்க அனுமதித்துள்ளது.
RBI சுற்றறிக்கை:
மேலும், RBI சுற்றறிக்கையில் குறிப்பிட்டதாவது,"வங்கிகள் தங்கள் இடர் மேலாண்மைக் கொள்கையின் அடிப்படையில் நெட் பேங்கிங் சேவை, ATM அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் போன்ற கூடுதல் சேவைகளையும் சிறார்களுக்கு வழங்க முடியும்.
இருப்பினும், சிறார்களின் கணக்குகள் அதிகமாகப் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சிறார்களின் வாழ்க்கை பயனை மேம்படுத்தும் என கருதப்படுகிறது.
English Summary
new announcement by RBI made children above age 10