யு.ஜி.சி. தலைவராக எம்.ஜகதீஷ்குமார் நியமனம் - Seithipunal
Seithipunal


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.ஜகதீஷ்குமார் யு.ஜி.சி. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், பல்கலைக் கழக மனியக் குழுவின் தலைவராக கடந்த 2018 முதல் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி வரை பதவி வகித்து வந்த டி.பி.சிங் 65 வயதை எட்டியதால் அவரின் பதவி காலம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து தற்போது புதிய தலைவராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் எம். ஜகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் அடுத்த 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை அந்த பதவியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து எம். ஜலதீஷ்குமார் கூறுகையில், புதிய பணி சவால் நிறைந்தது என்றும், புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக அனைத்து பல்கலைக் கழக துணை வேந்தர்களையும் சந்தித்து பேச உள்ளதாகவும், அனைவருக்கும் கல்வி எளிதில் கிடைக்க தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New chairman appointed for UGC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->