உச்ச நீதிமன்றத்தில் கண்காட்டப்படாத புதிய நீதிதேவதை சிலை.! - Seithipunal
Seithipunal


நீதிமன்றங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளுடனும் இருக்கும். இது உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்த்து நீதி வழங்கிட கூடாது என்பதையும், சரியான எடை போட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதை உணர்த்தவும், அநீதியை வீழ்த்திட வாளும் நீதிதேவதையின் அடையாளமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், இந்த அடையாளத்தை மாற்றும் விதமாகவும் ‛சட்டத்தின் முன் சமத்துவம் ' என்பதை வலியுறுத்திட நேற்று உச்ச நீதிமன்ற நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். இந்த சிலை வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, கையில் அரசியலமைப்பு புத்தகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நீதிதேவதை சிலை சட்டம் குருடு அல்ல ' என்பதையும் சட்டத்தின் முன் சமத்துவத்தை வலியுறுத்திட நீதிமன்றங்களின் அதிகாரத்தையும் குறிக்கிறது. ஆகவே சட்டம் ஒருபோதும் குருடாகாது, அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதை உணர்த்த கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது.

இடது கையில் தராசுக்கு பதிலாக நம் அரசியல் சாசன புத்தகம் நம் நாட்டின் நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டங்களின்படி நீதி வழங்குகின்றன என்பதை வலியுறுத்துகிறது. வலதுகையில் உள்ள எடை தராசு நம்சமூகத்தில் சமநிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், இரு தரப்பு உண்மைகளும் வாதங்களும் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றங்களால் எடைபோடப்படுகின்றன என்ற கருத்தையும் வலியுறுத்தவே உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new lady justice statue in supreme court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->