இருமடங்கு அதிகரித்த புதிய வகை கொரோனா தொற்று: மத்திய அரசு எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 328 பேருக்கு 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை தற்போது 3420 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின் படி கொரோனா பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரள மாநிலத்தில் இருவரும், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருவரும் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

தற்போது கொரோனாவின் புதிய வகையான ஜெ.என்-1 தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை தொற்று முதலில் இந்தியாவில் கேரளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 22 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு, கொரோனா பரவல் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new type corona increasing central government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->