மதுரை || வாகனத்தை சரி செய்து தர சொல்லி டார்ச்சர் - ஒர்க் ஷாப் ஓனரைத் தாக்கிய போலீஸ்.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி பகுதியில் திண்டுக்கலை சேர்ந்த சீனிவாசன் என்பவர் இருசக்கர வாகனம் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்தக் கடையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த அண்ணாதுரை என்பவர் தனது ராயல் என்பீல்டு பைக்கை கொடுத்து சர்வீஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஆனால், இருசக்கர வாகனம் சர்வீஸ் செய்ததற்கான தொகையை கொடுக்காமல் மிரட்டி வந்துள்ளார். தற்போது, பாலமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அண்ணாதுரை, அங்கு பணிபுரியும் மற்ற காவலர்களின் இருசக்கர வாகனத்தையும் சர்வீஸ் செய்து தர வேண்டுமென சீனிவாசனிடம் கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே பழைய பாக்கி இருப்பதால், பணத்தை கொடுத்தால் தான் சர்வீஸ் செய்து தருவேன் என்று சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து அண்ணாதுரை அடிக்கடி சீனிவாசனை தொலைபேசியில் அழைத்து வாகனத்தை பழுது பார்த்து தருமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சீனிவாசன் அண்ணாதுரையின் செல்போன் அழைப்பை தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அண்ணாதுரை கடந்த 4ஆம் தேதி பதிவு செய்யப்படாத ஒரு காரில் சீனிவாசனின் கடைக்கு சென்று அவரை மிரட்டி தாக்கியுள்ளார்.

மேலும், வாகனங்களை சர்வீஸ் செய்யவில்லை என்றால், கஞ்சா உள்ளிட்ட வழக்குகளை உன் மீது தூக்கிப் போட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இந்த நிலையில், சீனிவாசனை எஸ்.ஐ. அண்ணாதுரை தாக்கி காரில் ஏற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police disturb two wheeler wokshop owner for free service


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->