பிறந்த குழந்தையை இறந்ததாக தெரிவித்து விற்பனை: கையும் களவுமாக சிக்கிய மருத்துவர்கள்! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்து மருத்துவர்கள் குழந்தையை கவுன்சிலருக்கு விற்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப்பிரதேசம், பல்ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவரது மனைவி புஷ்பா தேவி. இவர் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி பிரசவத்திற்காக அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. 

புஷ்பா தேவி சுயநினைவு திரும்பியதும் தன் குழந்தையை கேட்ட போது குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் குழந்தை உயிருடன் இருப்பதாக புஷ்பா தேவி உறுதியாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற அவர் தனது குழந்தையை தர வேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும் இது தொடர்பாக புஷ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தியதில் புஷ்பாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பிறந்த குழந்தையை கவுன்சிலர் நிசார் என்பவருக்கு விற்றதாக தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கவுன்சிலர் வீட்டில் இருந்த குழந்தையை மீட்டு போலீசார் தாயிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

newborn baby sale doctors arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->