புதுமண தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை..!
Newlywed couple commits suicide by hanging
புதுமண தம்பதிகள் வீட்டில் தனி, தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் குஷிநகர் மாவட்டம் சாப்ராவைச் சேர்ந்த நந்த கிஷோரின் மகன் அஜித் குமார் (25) மற்றும் கவுதம் பிரசாத்தின் மகள் சங்கீதா தேவி (22). இவர்கள் இருவருக்கும் கடந்த 06 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும்பலமுறை குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இதனையடுத்து இன்று இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த தகராறு முற்றிய நிலையில், இருவரும் தனித்தனி அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவானைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Newlywed couple commits suicide by hanging