டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும்; 03 நாளில் தொற்று ஏற்படும்; மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!
Nitin Gadkari warns that staying in Delhi will reduce your life expectancy by 10 years you will get infected in 03 days
டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும், வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாடு அளவீடுகளை குறிப்பிட்ட அவர், டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும், வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்றும் கூறியுள்ளார். மேலும், டெல்லியில் 03 நாட்கள் தங்கினால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும் என்று கூட்டத்தில் உள்ளவர்களை பார்த்து கூறியுள்ளார்.

அத்துடன், மாசுபாட்டில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாகவும், இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு நிலையை அவசரமாக கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டுள்ளதோடு, "மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ''நாங்கள் கிட்டத்தட்ட ரூ. 22 லட்சம் கோடி மதிப்புக்கு புதை படிவ எரிபொருளை இறக்குமதி செய்கிறோம். இதற்கு பதிலாக மாற்று எரிபொருளை நான் ஆதரிக்கிறேன். புதை படிவ எரிபொருள் இறக்குமதியை குறைத்து, பசுமை எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்து விவசாயிகளின் பைகளில் ரூ.12 லட்சம் கோடி வரை சேமிக்க விரும்புகிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் தயாரித்த காற்று தர குறியீட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, டெல்லியில் மாசுபாட்டுக்கான எச்சரிக்கை விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nitin Gadkari warns that staying in Delhi will reduce your life expectancy by 10 years you will get infected in 03 days