பாகிஸ்தான் என யாரும் கூறக்கூடாது!...உச்ச நீதிமன்றம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


நில உரிமையாளருக்கும், குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பான வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா, பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம்,   உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை என்றும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டு வழக்கு விசாரணையை இன்று ஒத்தி வைத்து இருந்தது.


இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த், ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.

அப்போது, நீதித்துறை நடவடிக்கைகளின்போது, பெண் வெறுப்பு அல்லது சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கும் பாதகமானதாகக் கருதப்படும் கருத்துக்களை வெளியிடாமல் நீதிமன்றம் கவனமாக இருக்கவேண்டும் என்று  தலைமை நீதிபதி கூறினார்.

மேலும் நீதித்துறையின் அனைத்துத் தரப்பினரும் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் நம்புவதாக தெரிவித்த நீதிபத்தில்,  இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று யாரும் அழைக்கவேண்டாம் என்றும், இது தேச ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No one should say Pakistan Supreme Court condemned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->