அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை 10 நாள் காவலில் விசாரிக்க நடவடிக்கை - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைக்கழக பெண் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன், தற்போது போலீஸாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாகி வருகிறார்.

சிறப்பு புலனாய்வு குழு (SIT) இந்த வழக்கை மேற்பார்வை செய்யும் நிலையில், ஞானசேகரனை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் நீதிமன்ற அனுமதி கோர உள்ளனர்.

திருட்டு, வழிப்பறி மற்றும் ஆள் கடத்தல்:
ஞானசேகரன் தனது கடந்த காலத்தில் துப்பாக்கி முனையில் ஆள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டிருந்தார்.

பிரியாணி மூலம் நட்பு வளையம்:பலரை இலவசமாக பிரியாணி வழங்கி, தனது சுற்றத்திற்குள் ஈர்த்து குற்றச்செயல்களுக்கு உபயோகித்திருக்கிறார்.

பின்புலம்:தனியாக இவற்றில் ஈடுபட்டதாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளதால், அவரது பின்னணியில் பலர் தொடர்புடையவர்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

குண்டர் சட்டம்: ஞானசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குற்றப்பத்திரிகை: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தண்டனை பெற நடவடிக்கை தீவிரமாக உள்ளதாம்.

சமூக ஊடக தகவல்கள்: ஞானசேகரனை குறித்த சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்கள் அனைத்தையும் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட நிலையில், ஞானசேகரனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான அறிவியல் ஆதாரங்கள் மற்றும் மற்ற குற்றச்சான்றுகள் திரட்டப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கு, சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், ஞானசேகரனின் தொடர்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தீவிர விசாரணை மூலம் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University student sex case Action to interrogate Gnanasekaran for 10 days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->