டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமனம்! - Seithipunal
Seithipunal


டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் காலமானார்.  

இவரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

தொடர்ந்து மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் அவரது உடல் மீது தேசிய கோடி போர்த்தப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, ரத்தன் டாடாவின் சகோதரர் உறவுமுறையை கொண்ட நோயல் டாடா, டாடா டிரன்ட்டின் தலைவராகவும், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், ரத்தன் டாடாவின் மறைவை தொடர்ந்து, டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Noel tata appointed as the new chairman of tata trust


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->