இரட்டை மாடி கட்டிடம் இடிந்துவிழும் போது, தூங்கிய நபரால் பரபரப்பு.!
Noida double building issue
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் எமரால்ட் கோா்ட் வளாகத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் இன்று பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது. இதற்கு முன்னதாக, பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் வீடுகளில் உள்ள சன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும் என்றும், வெளியே இருந்தால் என் -95 முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து, இன்று கட்டடம் தகர்ப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக யாரேனும் தகர்க்கப்படும் பகுதிக்கு அருகில் இருக்கிறார்களாக என சோதிக்கப்பட்டது. அப்போது ஒருவர் குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அதிகாரிகளால் அறிவுத்தப்பட்ட ஆபத்தான பகுதிக்கு அருகில் தூங்கியுள்ளார். இதனைப் பார்த்த பாதுகாவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அதிகாரிகளுக்கு தகவலளித்தார். இதனையடுத்து, அந்த நபர் ஆபத்தான பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டார்.
English Summary
Noida double building issue