இனி அனைத்து தேர்வுகளும் ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும்..ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வினாத்தாள் கசிவு எதிரொலியாக பதவி உயர்வுக்கான அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கிழக்கு மத்திய ரெயில்வே சார்பில் உத்தர பிரதேசத்தின் முகல்சராய் பகுதியில்,  தலைமை என்ஜின் ஆய்வாளர்கள் பணிகளுக்கான துறை ரீதியிலான தேர்வு நடந்தது. அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில், 3 இடங்களில் சி.பி.ஐ. அமைப்பு சோதனை மேற்கொண்டதில், முகல்சராய் பகுதியில் 3 இடங்களில் தேர்வு எழுத வந்த ரெயில்வே ஊழியர்கள் 17 பேர் அறையில், கையால் எழுதப்பட்ட வினாத்தாள்களின் புகைப்பட நகல்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வினாத்தாள் கசிவு தொடர்பாக மூத்த டிவிசனல் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் (டி.இ.இ.) ஒருவர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் 8 பேர் மற்றும் தேர்வு எழுத வந்த பெயர் தெரியாத நபர்கள் மற்றும் சிலருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அப்போது சி.பி.ஐ. விசாரணையில், நடத்தப்பட்ட தேர்வுக்கான வினாத்தாளை உருவாக்கும் மற்றும் தயாரிக்கும் பணிக்கான பொறுப்பானது, மூத்த டி.இ.இ. அதிகாரிக்கு அளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அப்போது அவர் ஆங்கிலத்தில் கேள்விகளை எழுதி உள்ளார். இதன்பின்னர் ரெயில் என்ஜின் ஓட்டுநர் ஒருவரிடம் அதனை தந்துள்ளார் என கூறப்படுகிறது. அது பின்னர் இந்தியில் மாற்றம் செய்யப்பட்டு, சூப்பிரெண்டு அளவிலான அதிகாரியிடம் தரப்பட்டு உள்ளது தெரியவந்தது. மேலும் அவர், சில ரெயில்வே ஊழியர்கள் வழியே தேர்வு எழுத வந்தவர்களிடம் அவற்றை கொடுத்துள்ளார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இந்த விவகாரத்தில், மூத்த டி.இ.இ. மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ஆகியோரை, பணம் வசூலிப்பு மற்றும் வினாத்தாள் விநியோகித்தல் ஆகியவற்றுக்காக சி.பி.ஐ. அமைப்பு கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. மேலும் ஓட்டுநர்களாக பணிபுரிந்த துறை சார்ந்த ரெயில்வே ஊழியர்கள் 17 பேரும், வினாத்தாளுக்காக பணம் கொடுத்ததற்காக, தேர்வு அறையில் வைத்தே வினாத்தாள்களுடன் பிடிபட்டனர்.

இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.பி.ஐ. அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் இந்த வழக்கில் இதுவரை ரெயில் அதிகாரிகள் 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த விவகாரத்தில்,இதுவரை 8 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.1.17 கோடி பணமும் கைப்பற்றப்பட்டது. வினாத்தாள்கள், அவற்றின் புகைப்பட நகல்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அனைத்து பதவி உயர்வு தேர்வுகளையும் ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) மூலம் நடத்தவும், பொதுவான முறையில் கணினி அடிப்படையில் நடத்தவும் ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையாக தேர்வுகள் நடத்துவதில் உள்ள அனுபவம் காரணமாக ஆர்.ஆர்.பி.யிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வே வாரியம் நேற்று நடத்திய உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஒரு காலண்டர் அடிப்படையில் நடத்தப்படும் என்றும், இதற்காக அனைத்து ரெயில்வே மண்டலங்களும் ஒரு காலண்டரை உருவாக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Now all exams are for RRB. It will be conducted by . . . Ministry of Railways!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->