நூபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து, இஸ்லாமிய பயங்கரவாதிகள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுர் சர்மாவை ஆதரித்த கன்னையா லால் என்பவரை கொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில் நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில், இந்தியா முழுவதும் தனக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களில் பதியப்பட்ட வழக்குத் தொடர்பாக தன்னை கைது செய்யக்கூடாது என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நூபுர் சர்மா தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்து மற்ற மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nupur Sharma case Supreme Court order July


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->