இளம்பெண்ணை 79 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி.! துணைபோன கணவன்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா : இளம்பெண்ணை 79 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கும், அவருடைய கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த குடியும்ப பிரச்சனைக்கு தீர்வு காண, அந்த பெண்ணின் கணவன் வீட்டார் ஒரு மந்திரவாதியை நாடி உள்ளனர். 

மந்திரவாதி, சில மாதம் தனது வீட்டில் அந்த பெண்ணை தங்க வைத்து, சில பூஜைகள் செய்து பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன் என்று சொல்லியுள்ளார். அதன்படி, அந்தப் பெண்ணையும், 2 வயதேயான குழந்தையையும் விட்டுச் சென்றுள்ளனர். 


 
பின்னர், அந்த பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்த மந்திரவாதி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி மந்திரவாதி செல்போனை விட்டுச் செல்லவே, அந்த அந்த போன் மூலம் தனது பெற்றோரை தொடர்பு கொண்ட பெண், தனக்கு அரங்கேறிய கொடுமைகளை கூறி அழுதுள்ளார். 

இதனையடுத்து, பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் படி, சம்பவ இடத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தையை போலீசார் மீட்டனர். 

தப்பி ஓடி தலைமறைவான மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரில், கணவன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, மயக்க மருந்து கொடுத்து மந்திரவாதியின் வீட்டில் தள்ளிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவன், கணவனின் சகோதரர் மற்றும் மாமனார்-மாமியார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

odisa young girl locked up home 79 days sexually abused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->