இந்தியாவில் 124 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு நாடு முழுவதும் வெயில் வாட்டி எடுத்தது. பெரும்பாலான மாநிலங்களில் பகல் நேர வெப்பம் புதிய உச்சங்களை எட்டியிருந்தது.

இது தொடர்பாக, புதுடில்லியில் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது:

இந்தியாவில் 1901ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான பதிவுகளின் அடிப்படையில், முடிந்து போன 2024ஆம் ஆண்டுதான் அதிகப்படியான வெப்பம் பதிவான ஆண்டாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்தாண்டு வெப்பநிலை, இயல்பை விட 0.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை, நீண்ட கால சராசரியை விட 0.90 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐரோப்பிய காலநிலை ஏஜென்சி தகவலின்படி, கடந்த ஆண்டு பதிவில் அதிக வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது.

2024ஆம் ஆண்டில் உலகம் சராசரியாக 41 நாட்கள் ஆபத்தான வெப்பத்தை அனுபவித்ததாக கால நிலை விஞ்ஞானிகளின் குழுக்களின் அறிக்கை கூறியுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India experiences the hottest temperature in 124 years


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->