பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை; மீறுவோருக்கு அபராதம்; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி..! - Seithipunal
Seithipunal


பொது வெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் ஜனவரி 01ஆம் தேதியான இன்று முதல்  அமலுக்கு வந்துள்ளது. 

உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்த் உள்ளது. மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் அதிகம்பேர் ஆதரவு தெரிவித்ததால், குறித்த அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக சுவிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ம்ஆண்டுக்கான உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருந்து.  அந்த பட்டியலில் உலகின் சிறந்த நாடு என்ற பெருமையுடன் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சுவிட்சர்லாந்து முதல் இடத்தில் இருக்கிறது. 02-வது இடத்தில் ஜப்பான், 03-வது இடத்தில் அமெரிக்கா, 04-வது இடத்தில் கனடா 05-வது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன.

சுவிட்சர்லாந்து உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும், வாழ்வாதாரம், வாழ்க்கை சூழல், கல்வி என எல்லாவற்றிலும் முன்னேறிய நாடாக உள்ளது.


 
இந்நிலையில், பொது வெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடையை அணிந்து செல்ல தடைவிதிக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் (51 சதவீதம்) ஆதரித்துள்ளனர்.

இதையடுத்து, இது தொடர்பாக அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் 06ஆ ம் தேதி புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அந்த சட்டம் 2025 ஜனவரி 01ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தை மீறி பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து சென்றால் அந்நாட்டு பணத்தில் 100 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban on face covering clothing in public Swiss government takes action


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->