பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - பறிபோன மாணவி உயிர்.!
school student died for school van accident in kerala
கேரள மாநிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் அருகே வளகை என்ற இடத்தில் பள்ளி வேன் ஒன்று இறக்கத்தில் வந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 15 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student died for school van accident in kerala