ஒடிசாவை கலக்கும் தமிழர்..யாரிந்த வி.கே.பாண்டியன்? வெளியான தகவல்!!
Odisha fame vk pandiyan
மே 29, 1974ம் ஆண்டு பிறந்தவர் வி. கார்த்திகேயன் பாண்டியன் எனப்படும் வி. கே. பாண்டியன். இவர் மதுரை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும் புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளார்.
இதையடுத்து 2000ம் ஆண்டு பஞ்சாப் கேடரில் IAS அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2005ம் ஆண்டு மயூர்பன்ச் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட வி. கே. பாண்டியன், தொடர்ந்து இந்தியாவின் இளம் வயது மாவட்ட ஆட்சியர்களில் ஒருவராக இருந்தார்.
2011ம் ஆண்டு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், 2023ம் ஆண்டு அந்தப் பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக இருக்கும் வி. கே. பாண்டியனை தான் பாஜக குறிவைத்து பிரச்சாரத்தில் ஒடிசா மக்களின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக பேசி வருகிறது.
அந்த வகையில் ஒரு தமிழர் ஒடிசாவை ஆளலாமா? என்று கேட்டு ஒடிசா மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக பிஜூ ஜனதாதள கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடி, உ.பி.யில் போட்டியிடும்போது ஒரு தமிழர் ஒடிசாவில் போட்டியிடக்கூடாதா? என்று தமிழக சட்டப்பேரவைத்த தலைவர் அப்பாவு குரல் கொடுத்துள்ளார்.