இந்திய ஹாக்கி அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பை 3 ஆண்டுகள் நீட்டிக்க ஒடிசா அரசு முடிவு..! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் இந்திய ஹாக்கி விளையாட்டின் மையப் புள்ளியான ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை ஹாக்கி மற்றும் ப்ரோ ஹாக்கி லீக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. 

இந்நிலையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளின் சீனியர் மற்றும் ஜூனியர் இரு பிரிவு அணிகளுக்கும் ஒடிசா அரசு 2018ம் ஆண்டில் இருந்து ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சமீபத்தில் தான் இந்த ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாக ஒடிசா அரசு அறிவித்தது. 

அதன் படி, 2023ம் ஆண்டில் இருந்து 2033ம் ஆண்டு வரை இந்திய ஹாக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளுக்கு ஒடிசா அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கும் என்று அறிவிக்கப் பட்டது. இந்த முடிவு முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப் பட்டது. 

இந்நிலையில் தற்போது ஒடிசாவில் முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தலைமையிலான அமைச்சரவைக் குழு, முன்னர் அறிவிக்கப் பட்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக முடிவு செய்துள்ளது. 

இதன்படி ஹாக்கி அணிகளுக்கான ஒடிசா அரசின் இந்த ஸ்பான்சர்ஷிப் 2036ம் ஆண்டு வரை நீடிக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஒப்பந்தத்தில் ஹாக்கி இந்தியா குழுவினரின் முன் இன்று ஒடிசா அரசு கையெழுத்திட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha Government Has Decided to Extend the Sponsorship For Indian Hockey Team


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->