சி.ஏ தேர்வு தேதி மாற்றம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நாட்டில் சி.ஏ. எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 12, 14, 16, 18 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறும் என்று இந்த தேர்வை நடத்தும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியா என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வு நடத்தப்படும் ஜனவரி 14-ம் தேதியன்று தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதால், சி.ஏ. தேர்வை நடத்துவது, தேர்வு எழுத இருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதிலும் மொழி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பிரச்சாரமாக கொண்டு வருகின்றனர். தேர்வு ஆணையத்தின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், சி.ஏ தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், ஜனவரி மாதம் 14-ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு, ஜனவரி 16-ம் தேதி அன்று நடைபெறும் என்று இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ca exam date change for pongal festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->