ஒடிசா ரயில்கள் விபத்து.. பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு.. 900 பேர் படுகாயம்.!
Odisha train accident 207 peoples death
ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10 பெட்டிகள் சரிந்து அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ரயில் பெட்டிகள் கவிழ்ந்திருந்த தண்டவாளத்தில் அதிவிரைவு ரயிலான எஸ்வந்த்பூர் ஹவுரா ரயில் கவிழ்ந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு சரிந்தன. இந்த இரண்டு பயணிகள் ரயிலுடன் மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர ரூபத்தில் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.
English Summary
Odisha train accident 207 peoples death