நிவாரண தொகைக்காக ஒடிசா ரெயில் விபத்தில் கணவர் உயிரிழந்ததாக ஏமாற்றிய மனைவி! அம்பலமான நாடகம்! - Seithipunal
Seithipunal


ஒடிசா ரெயில் விபத்தில், அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகையை பெறுவதற்காக, கணவர் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

மேலும் அங்கு வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,100 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த பயங்கர நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்தார். 

மேலும், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், ரெயில்வே துறை சார்பில் ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது கணவர் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்ததாக கூறி நிவாரணத் தொகையை பெறுவதற்காக பெண் ஒருவர் நாடகமாடி வசமாக மாட்டியுள்ளார். கட்டாக் மாவட்டம் மணிபண்டாவைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா என்ற பெண்ணின் கணவர் பிஜய் தத்தா. இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், கீதாஞ்சலி தனது கணவர் பிஜய் தத்தா ஒடிசா ரெயில் விபத்தில் இறந்துவிட்டதாக கூறியதோடு, அங்கிருந்த ஒரு உடலை தனது கணவருடையது என்றும் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், ஆவணங்களைச் சரிபார்த்ததில், அவர் பொய் சொல்கிறார் என தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து விடுவித்தனர். இந்த நிலையில் தான் மரணித்து விட்டதாக பொய் சொல்லி, பொதுப் பணத்தை அபகரிக்க முயன்ற கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது கணவர் பிஜய் தத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் கீதாஞ்சலி தலைமறைவாகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha Train Accident some forgery filed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->