மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.!! மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.!! - Seithipunal
Seithipunal


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஏக்கம் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. அதை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. குறிப்பாக காங்கிரஸ் ஆளும்  மாநிலங்களில் பழைய ஓய்வூதிய  அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தினமும் பல புதுப்பிகளும் வந்துகொண்டு இருக்கின்றன.  

இந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவை ஆளும் பாஜக கூட்டணி அரசும்  பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளது. மீண்டும் பழைய ஓய்வூதியத்தை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிர அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவின் கீழ், நவம்பர் 2005 க்குப் பிறகுஅரசு வேளையில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசு மற்றும் அரசு நிறுவனங்களை சார்ந்த  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சில நாட்களிலேயே மகாராஷ்டிரா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old pension scheme to be implemented again in Maharashtra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->