எகிறும் ஒமைக்ரேன் வைரஸ்., பிரதமர் மோடி அவசர ஆலோசனை., வெளியாக போகும் அறிவிப்புகள்.! - Seithipunal
Seithipunal


உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதில், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 236 பேர் ஒமைக்ரேன் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டாவதாக தலைநகர் டெல்லியில் 64 பேர் ஒமைக்ரேன் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மொத்தமாக தமிழகத்தில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒமைக்ரான் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. அறிவியல் ஆதாரத்தின்படி டெல்டா வகையைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை மூன்று மடங்கு அதிகம் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஒமைக்ரான் பரவல் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OMICRON ISSUE PM MODI MEETING


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->