சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்று மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். 

தொடர்ந்து அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்தும் பேசி வருகிறார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்துக்கு வருகிற 21, 22-ந் தேதி என்று இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்கிறார். 

இதற்காக 21-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக சிவகங்கை செல்கிறார். தொடர்ந்து 21-ந் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூலகத்தை திறந்து வைக்கிறார். 

22-ந் தேதி சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 21 and 22 chief minister stalin visit sivakangai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->