சிறை கைதியாக அனுபவம் வேண்டுமா?.. ஒரு நாள் நுழைவுக் கட்டணம் ரூ.500.!
One day entry fee is Rs.500 for Jail in uthrakhand
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும், நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக போலீசார் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அதன் பின்னர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு சிறைக்கு சென்று வரும் குற்றவாளிகளை இந்த சமூகம் மிகவும் கொடூரமானவர்களாக பார்க்கிறது. ஆனால், சிலருக்கோ சிறைச்சாலைகளில் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் சிறைச்சாலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும்.
இந்த நிலையில் இத்தகைய ஆர்வம் உள்ளவர்களுக்காக உத்தரகாண்டில் உள்ள ஹல்த்வானி சிறைச்சாலை சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
அதாவது, 500 ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் இரவு முழுவதும் சிறைச்சாலையில் கைதியாக இருக்கலாம். இதன் மூலம் சிறைச்சாலையில் இருந்து அனுபவத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
English Summary
One day entry fee is Rs.500 for Jail in uthrakhand