சத்தீஸ்கரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை வௌவால்.! - Seithipunal
Seithipunal


பாலூட்டி விலங்குகளில் அரிதான ஒரு விலங்கு என்றால் அது வௌவால் தான். ஏனெனில், வௌவால் மட்டும் தான் பறக்கும் பாலூட்டி விலங்காகும். வௌவால்கள் தனது செவித்திறமையால் மீயொலியை பயன்படுத்தி பறக்கின்றது. இதற்கு பார்ப்பதற்கு என்று தனி இறக்கைகள் கிடையாது.

இத்தகைய சிறப்பு அம்சங்களைக் கொண்ட வௌவால்களில் அரிய வகையான ஆரஞ்சு நிற வௌவால் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில்  கங்கேர்காட்டி தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாமல் வனவிலங்கு பாதுகாப்பு பட்டியலில் அழிந்து வரும் நிலையில் உள்ள ஓநாயும் காணப்படுவதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக கங்கேர்காட்டி தேசிய பூங்காவின் இயக்குனர் கன்வீர் தரம்ஷீல் தெரிவித்ததாவது, "ஓநாய்களை பாதுகாக்கவும், வனவிலங்குகளை காப்பாற்றவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. 

அத்துடன் இந்த விலங்குகள் குறித்து மக்கள் பார்வையிடுவதற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையினர் தனித்தன்மை வாய்ந்த மற்றும் அரியவகை வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிப்பதற்கு காட்டின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்களை பொறுத்தியுள்ளனர். அந்த கேமராக்களில் விலங்குகளின் வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் பதிவாகி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

orange colour bat found in satheeskar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->