அனைத்து வாகனங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டாயம் - எங்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


அனைத்து வாகனங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டாயம் - எங்கு தெரியுமா?

சிக்கிம் மாநிலத்தில் அதிக உயரத்தில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதனால் சிக்கிம் மாநில அரசு ஜூலை ஒன்று முதல் மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் ஆக்ஸிஜன் விநியோக கருவிகள் அல்லது கேனிஸ்டர்களை கட்டாயமாக்கியுள்ளது.

இது குறித்து சிக்கிம் போக்குவரத்து செயலர் ராஜ் யாதவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தனிநபர் மற்றும் வணிக ரீதியிலான அனைத்து வாகனங்களுக்கும் கையடக்க ஆக்சிஜன் கிட்கள் அல்லது கேனிஸ்டர்கள் கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் வடக்கில் 10,000 அடிக்கு மேல் உயரத்தில் லாச்சென், லாச்சுங், குருடோங்மார் ஏரி மற்றும் யும்தாங் போன்ற பல பிரபலமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் மூச்சு திணறலை எதிர்கொள்ளும் சம்பவங்கள் பல இடங்களில் அதிகளவில் பதிவாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஆக்சிஜன் கிட்கள் மற்றும் கேனிஸ்டர்கள் மாநில சுகாதாரத் துறையால் அளிக்கப்படும். அதே சமயம் வாகனங்கள் இந்த உத்தரவைக் கடைப்பிடிக்கிறதா? என்பதை உறுதிப்படுத்த காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அடிக்கடி சோதனைகளை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oxygen cylinders must sikkim state vechicles


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->