பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காஷ்மீர் இளைஞர்!
Pahalgam attack
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த மூளையாக காஷ்மீரைச் சேர்ந்த ஆதில் அகமது தோகர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தின் குர்ரே என்ற சிறிய கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சிறு வயதிலேயே தீவிரவாதக் குழுக்களில் ஈடுபடும் ஆர்வம் கொண்டவராக மாறினார்.
2018ஆம் ஆண்டு மாணவர் விசா மூலம் பாகிஸ்தான் சென்ற ஆதில் அகமது தோகர் மீது இந்திய உளவுத்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டனர். பாகிஸ்தானில் திடீரென மாயமான ஆதில் அகமது தோகர் தீவிரவாத இயக்கங்களுடன் சேர்ந்து ஆயுத பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறாண்டுகளுக்குப் பிறகு, 2024ஆம் ஆண்டு ஆதில் இந்திய எல்லையை ஊடுருவி நுழைந்த ஆதில் அகமது தோகருடன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த நால்வரும் நுழைந்தது டிஜிட்டல் தடயத் தகவல்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே காஷ்மீரில் பல்வேறு சிறிய அளவிலான தாக்குதல்களில் ஆதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறான். தற்போது பஹல்காம் தாக்குதலிலும் இவன் திட்டத்தை வகுத்து செயல்பட்டிருப்பது தெளிவாகியுள்ளது.
மேலும், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் தீவிரவாத அமைப்புகள் ஆதிலை பயன்படுத்தி இந்தியாவில் இன்னும் பல சதி தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன என்பதும் உளவுத்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.