உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்; பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி..!
Safety of firecracker factories should be regulated Edappadi Palaniswamy
சிவகாசி அருகே நெடுங்குளம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்து சம்பவம் தொடர்பில் ஆலை மேலாளர் உட்பட இரண்டு பேரை போலீசர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Safety of firecracker factories should be regulated Edappadi Palaniswamy