அஜித்தின் "வீரம்" ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது..!
Ajith Veeram re release trailer has been released
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் கிங் நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர். அஜித் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸான படம் 'வீரம்'. இந்த படத்தை சிவா இயக்கி இருந்தார். தமன்னா, சந்தானம், விதார்த், பாலா, நாசர், தம்பி ராமையா, அப்புக்குட்டி என ஏராளமானோர் நடித்திருந்தனர்.
அஜித்துடன் சிறுத்தை சிவா இணைந்த முதல் படம் இதுவாகும். இந்தப் படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான ஆக்ஷன் படம். 45 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 130 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவா கூட்டணியில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று வரிசையாகத் தொடர் வெற்றிப்படங்களை அஜித் கொடுத்துள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 01ந் தேதி அவர் நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற 'வீரம்' படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் 'வீரம்' படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
English Summary
Ajith Veeram re release trailer has been released