தமிழக வெற்றி கழகம் என்றாலே பல கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது: புஸ்ஸி ஆனந்த்..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதை அக்கட்சியின் தலைவர் விஜய், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது தமிழக வெற்றி கழகம் என்றாலே பல கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டதாக புஸ்ஸி ஆனந்த் கூறினார். அத்துடன் அவர் அங்கு மேலும் பேசுகையில், "வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதாரண ஆட்கள் அல்ல, கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு. இந்த கருத்தரங்கு கூட்டத்தை நீங்கள் கவனமாக கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன்,  குறிப்பு எடுத்துக் கொண்ட பணியாற்ற வேண்டும். தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அதற்கு 10 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு தொண்டனை கூட இழக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், 34 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருத வேண்டும். தினமும் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர், அணி தலைவருடன் இணைந்து நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்றும், அவர்கள் மக்களை தினமும் சந்திக்க வேண்டும் என்றும், அவர்களின் பிரச்சனையை கேட்டறிய வேண்டும்.

பிரச்சனைகளை கண்டறிவதற்கு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க வேண்டும் எனவும், மக்களின் அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு அவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் அவர் மேலும்  தெருவில் மின்விளக்கு எரியாவிட்டால் அதனை உடனடியாக நாமே மாற்ற வேண்டும். இது போன்ற சிறு சிறு மக்களின் பிரச்சனைகளை நீங்களே சரி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், ஒரு நபருக்கு 30 வாக்காளர்கள் என வாரா வாரம் அவர்களை சந்தித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றும், உங்களால் தீர்க்க முடியாத பிரச்சனை என்றால் கட்சி தலைமைக்கு கூற வேண்டும் என்றும்,2026 வெற்றிக்கு பி என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Many parties are afraid of the Tamil Nadu Victory Party Pussy Anand


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->