ஜம்மு-காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்.! ஆயுதங்கள், பணம் பறிமுதல்.!
Pakistan Drone Carrying money and weapons Shot Down Jammu Kashmir
ஜம்மு காஷ்மீரில் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் பணம் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் ஒன்று ஊடுறுவதை கண்டறிந்த பாதுகாப்புப் படையினர், ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ள கிராமங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஆளில்லா விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த பாக்கெட்டில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியின் 5 மேகசின்கள், 131 ரவுண்டுகள், ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் கையாளுபவர்கள் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதற்காக, ஆயுதங்களையும், பணத்தையும் அனுப்பியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pakistan Drone Carrying money and weapons Shot Down Jammu Kashmir