ரியாசி தாக்குதல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்களா ? பாகிஸ்தான் யூடியூப் ஊடகம் தெரிவித்த செய்தி !! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் 9ஆம் தேதி அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ரியாசியில் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நிறைந்த பேருந்தை ஒரு பயங்கரவாதி கும்பல் தாக்கியாது. இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் பலத்த காயமடைந்தனர். 

இந்திய பாதுகாப்புப் படைகளின் தெரிவித்த தகவலின் படி, இந்த கொடிய தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் முதலில் பேருந்தை தாக்கினர், அதன் பிறகு பஸ் ஒரு பள்ளத்தில் விழுந்தது. 

இப்போது இந்த விஷயத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசியில் நடந்த தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஒரு கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்  இன் தலைவர் பாகிஸ்தானில் அறியப்படாத இடத்தில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் யூடியூபர் சோயிப் சவுத்ரி தனது யூடியூபில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் யூடியூபர் சோயிப் சவுத்ரி 2 நாட்களுக்கு முன்பு தனது யூடியூப் சேனல் மூலம் ரியாசி தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். இது சம்பவம்  உண்மை என நிரூபணமானால், எல்லை தாண்டிய மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றார். 

ரியாசியில் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் ஓவியத்தை நாட்டின் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டது. மேலும், அவர்களை பற்றிய தகவல் தெரிவிப்போர்க்கு 20 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்காக, இந்த வழக்கில் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan youtuber announced that Kashmir attack terrorists were killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->