சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்த பாகிஸ்தானியர் கைது!
Pakistani national arrested for illegally staying in India
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மிர் பகுதியை சேர்ந்த ஒருவர் அடிக்கடி பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வசித்து வரும் நபர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது . மேலும் இது குறித்து முன்னதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஜெய்சல்மிரில் வசித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அப்போது கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
வினய் கபூர் என்ற பெயரில் வசித்து வந்த அந்நபர் பாகிஸ்தானியர் ஆவார் என்றும் பாகிஸ்தானை சேர்ந்த அந்நபரின் உண்மையான பெயர் ரஹிம்யர் கான் (வயது 35) என்றும் இவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து ராஜஸ்தானில் வசித்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர், வினய் கபூர் என்ற பெயரில் ஆதார் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக், செக் புக், உள்ளிட்ட போலி ஆவணங்களை பெற்றுள்ளார் என்றும் மேலும், போலி ஆவணங்கள் மூலம் செல்போன், சிம் கார்டு வாங்கியுள்ளார் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரஹிம்யர் கான் இந்தியாவுக்குள் நுழையவும், போலி ஆவணங்களை பெறவும் உதவியை உத்தரபிரதேசத்தை சேர்ந்த சச்சின் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Pakistani national arrested for illegally staying in India