இந்தியாவின் பிரபல இசைக்கலைஞர் பண்டிட் ஷிவ்குமார் சர்மா இன்று காலமானார்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பிரபல இசைக் கலைஞரான பண்டிட் ஷிவ்குமார் சர்மா இன்று மும்பையில் காலமானார்.

பண்டிட் ஷிவ்குமார் சர்மா ஜனவரி 13 ஆம் தேதி 1938-ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிறந்தார். இவர் இந்திய இசையமைப்பாளரும், சந்தூர் இசைக்கலைஞரும் ஆவார். இவர் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூர் பாரம்பரிய இசையை வாசித்து முதல் கலைஞர் என்கின்ற பெயரை பெற்றார்.

இவர் 1986 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றுள்ளார். 1991ல் பத்மஸ்ரீ விருதும், 2001ல் பத்மவிபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் கடந்த ஆறு மாதங்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டிருந்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pandit shivkumar Sharma passes away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->