மணிப்பூரில் பயங்கரம்!...முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் குண்டு வெடிப்பு! ...ஒருவர் பலி!...5 பேர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே நடைபெற்று வந்த வன்முறை பல மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில், திடீரென  சமீபத்தில் வன்முறை மீண்டும் வெடித்தது. 

அதன்படி, மணிப்பூரில் உள்ள மேற்கு இம்பால் நகரில் கவுடிரக் பகுதியில் குகி பயங்கரவாதிகள் சிலர் கும்பலாக கூடி ராக்கெட்டுடன் கூடிய எறிகுண்டுகளை குவித்ததோடு உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆளில்லா விமானங்களின் உதவியுடன் எறிகுண்டுகளை வீசி, துப்பாக்கி சூடு நடத்தினர். 

இந்த நிலையில், மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் நேற்று ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் அங்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panic in manipur rocket blast at former cm house one dead 5 seriously injured


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->